தமிழக ஆந்திர எல்லையில் சுற்றுலா பிரியர்களின் சொர்க்கம்..!!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது நன்னியாலா கிராமம். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் , ராமகுப்பம் மண்டலத்தில் அமைந்துள்ளது இந்த நன்னியாலா கிராமம்.
ஆந்திர மாநில வனத்துறையின் சார்பில் இங்கு சூழல் சுற்றுலா பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சிறுவர் விளையாட்டு பூங்காவும் உள்ளது. இந்தப் பூங்காவை ஒட்டி கும்கி யானை முகாம் ஒன்றும் உள்ளது. இந்த கும்கி யானை முகாமில் விநாயக், ஜெயந்த் என இரண்டு யானைகள் உள்ளன.
இங்கு உள்ள சூழல் சுற்றுலா பூங்காவை காணவும், கும்கி யானைகள் முகாமை காணவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆந்திர மாநிலம் மட்டும் அல்லாமல் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு , கர்நாடக மாநிலங்களில் இருந்தும் அன்றாடம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்து செல்லும் சுற்றுலா பிரியர்களுக்கு இயற்கையின் சூழலுடன் அமைந்த தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு, பின்னர் பணிகள் தொடராமல் இருந்து வந்தன.
ஆந்திர மாநிலத்தில் இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன் இப்போது தங்கும் விடுதிகளின் மராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் சில மாதங்களில் இங்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் தங்கி இளைப்பாறி செல்லவும், உணவு தேவைகளுக்காக பூங்காவின் உள்ளே உணவகத்தின் கட்டமைப்பு பணிகளும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது…
– இந்திரா கந்தசாமி…
Post Comment