ஆம்பூர் அருகே நடந்த தசரா திருவிழா!
ஆம்பூர் அருகே வடசேரி – மாராப்பட்டு பாலத்தின் அருகே பழமை வாய்ந்த பாரத கோயில் எனும் தர்மராஜா கோயில் உள்ளது. சம்மந்திக்குப்பம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் இந்த கோயில் நிர்வாகத்தை நிர்வகித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி அன்று இங்கு தசரா திருவிழா கொண்டாடுவது வழக்கம். இன்று இந்த பாரத கோயில் வளாகத்தில் நடந்த தசரா திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த தசரா திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைப்பெற்றது
What’s your Reaction?
+1
+1
+1
1
+1
+1
+1
+1
Post Comment