தமிழக ஆந்திர எல்லையில் தயாராகி வரும் சுற்றுலா பூங்கா…

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதி சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம். இந்த தொகுதியின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டுக்காகவும் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார் சந்திரபாபு நாயுடு.
இது போன்ற செயல்பாடு திட்டங்களுக்கு குப்பம் தொகுதியை சேர்ந்த மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து, திம்மாம்பேட்டை, நாயனூரு வழியாக குப்பம் செல்லும் வழியில் அமைந்துள்ளது பாலாறு கிராமம். இந்த கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணையை காண மழைக்காலங்களிலும், மற்ற காலங்களிலும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இந்த கிராமத்தின் அருகே இப்போது சூழல் சுற்றுலா பூங்கா அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. ஆந்திர மாநில வனத்துறையினர் இதற்கான பணிகளை விரைந்து செய்து வருகின்றனர். இந்த சூழல் சுற்றுலா பூங்காவை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவுள்ளது ஆந்திர மாநில அரசு. மக்கள் பயன்பாட்டுக்கு வரும் சூழ்நிலையில் இந்த சூழல் சுற்றுலா பூங்காவை காண ஆந்திரா, தமிழ்நாடு , கர்நாடகா மாநில சுற்றுலா பிரியர்களின் சொர்க்கமாய் மாறும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

 - இந்திரா கந்தசாமி...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *