டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டம்

டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் மீண்டும் வெடித்த வன்முறை. போராட்டக்காரர்கள் மீது தடியடி, கண்ணீர் புகைகுண்டுகளை வீசியதால் பதற்றம்.

📰 டெல்லி ஜந்தர் மந்தரை சுற்றியுள்ள இடங்களில் மீண்டும் இணைய சேவை துண்டிப்பு. போராட்டத்துக்கு சமூக வலைதளங்களில் அழைப்பு விடுக்கப்பட்டதால் ஒன்றிய அரசு நடவடிக்கை.

📰 உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட தயாராக இருப்பதாக சோனம் வாங்சுக் அறிவிப்பு. மூன்று நிபந்தனைகளை நிறைவேற்றுமாறு ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தல்.

📰 சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக்கை சந்திக்க எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு அனுமதி மறுப்பு. மருத்துவமனை வாசலிலேயே தடுத்து நிறுத்திய போலீசாருடன் வாக்குவாதம்.

📰 கரப்பான் பூச்சி கட்சி போராட்ட களத்திற்கு சென்று திமுக எம்பி கனிமொழி ஆதரவு. மாணவர்கள் மீது அக்கறை இல்லாததால் வன்முறையை கட்டவிழ்த்து விட்டதாக குற்றச்சாட்டு.

📰 பாஜக ஆட்சியில் 152 வினாத்தாள் கசிவுகளில் ஒருவர்கூட தண்டிக்கப்படவில்லை என ராகுல் காந்தி குற்றச்சாட்டு. அமைதியாக போராடும் மாணவர்களை ஆயுதங்கள் காட்டி மிரட்டுவது ஏன்? என்றும் கேள்வி.

📰 நீட் முறைகேடு விவகாரத்தில் மாணவர்களின் கோரிக்கையை அரசியலாக்கக் கூடாது. ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டா பதில்.

📰 ஜந்தர் மந்தர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம். டெல்லி போலீஸை கண்டித்து முழக்கமிட்டவர்களை இழுத்துச் சென்று கைது செய்த தமிழ்நாடு போலீஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *